கௌதம் மேனன் இயக்கத்தில்… சிம்பு – திரிஷாவின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு த்ரிஷா இணைந்து நடித்திருந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. கார்த்திக் – ஜெஸ்ஸி என்ற இரண்டு கேரக்டர்களாகவே சிம்புவும், த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும் ஒரு கவிதை போல மனதை மயக்கின.

இன்னும் அந்த மயக்கத்தில் இருந்து ரசிகர்கள் மீளவில்லை என்று தான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட விண்ணைத் தாண்டி வருவாயா வெளியாகி 10 வருடங்களாகின்றன. ரசிகர்கள் அனைவரும் விண்ணைத் தாண்டி வருவாய பட இரண்டாம் பாகத்துக்காக ஆவலாய் காத்திருக்கின்றனர்.

அவர்கள் ஆவலை கொஞ்சமாக பூர்த்தி செய்யும் விதத்தில் ஷார்ட் ஃபிலிம் வடிவில், கார்த்திக் டயல் செய்த எண் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. கௌதம் மேனன் எழுதி இயக்கியுள்ள இந்த படம் கார்த்திக் – ஜெஸ்ஸியின் வாழ்க்கையில் 10 வருடங்களுக்கு பின்பான நிகழ்வுகளை பேசுகிறது.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஐசரி கே. கணேஷ் மற்றும் கௌதம் மேனன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படமானது கொரோனாவின் அச்சுறுத்திலால் கஷ்டப்படும் மக்களுக்கு குளுமையான உணர்வை தரும் என்பதில் ஐயமில்லை.

Share via
Copy link
Powered by Social Snap