உலக அழகி கீரிடத்துடன் தாயுடன் சேர்ந்து தரையில் உணவருந்திய ஐஸ்வர்யா ராய்.. இணையத்தில் படு வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்துடன் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் வெற்றிபெற்று உலக அழகி பட்டத்தை கைப்பற்றினார் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் வென்றபிறகு உலகளவில் பிரபலமான இவர் பல்வேறு திரைப்படங்கள், விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார்.

குறிப்பாக தமிழில் இவர் நடித்த ஜீன்ஸ், இராவணன், எந்திரன் போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவிலும் பிரபலமாக்கியது. தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கிவரும் வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் படத்திலும் ஐஸ்வர்யா நடித்துவருகிறார்.

இதையடுத்து, சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அபிஷேக் பச்சானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு அந்த உடை மற்றும் உலக அழகி என்ற கிரீடத்தையும் தலையில் அணிந்தவாறு தரையில் அமர்ந்து சாப்பிடுகிறார். அவருடன் அவரது தாயாரும் உள்ளார்.

இப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அவ்வளவு எளிமையாக அவர் இருந்தது குறித்து அவரது ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap