தினமும் காலையில் இந்த ஜூஸை குடித்து பாருங்கள்!…

சுரைக்காய் உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும்.சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை அதிகம் கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற அதிகப்படியான சத்துகள் நிறைந்துள்ளது .

இது நீர்ச்சத்து நிறைந்த ஓர் காய்கறி என்பதனால் சிலர் ஜூஸ் தயாரித்துக் குடிப்பார்கள்.அதுமட்டுமின்றி இதனுடன் இஞ்சி சேர்த்து தினமும் காலையில் குடித்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை எப்படி தயாரிப்பது என்றும், அந்த ஜூஸைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு பார்ப்போம்.

ஜூஸ் தயாரிக்கும் முறை

முதலில் சுரைக்காயின் தோலை நீக்கி விட வேண்டும். பின் அதனை துண்டுகளாக்கி, ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை மிக்ஸியில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட் அல்லது இஞ்சி பவுடர் அல்லது இஞ்சி சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பானத்தை தினமும் காலை உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.
நன்மைகள்

இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் குடித்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து, அதனால் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் குடித்தால், அதில் உள்ள நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் குறிப்பிட்ட நொதிகள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை நீர்க்கச் செய்து, அஜீரண பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

இஞ்சி சேர்த்த சுரைக்காய் ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் கே போன்றவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கும். இந்த ஜூஸை தினமும் குடித்து, சரிவிகித டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸில் உள்ள பொட்டாசியம், உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க உதவும். ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான பானமாகும்.

சுரைக்காயில் உள்ள நீர்ப்பெருக்கி பண்புகள், சிறுநீரக பாதையில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும். எனவே இந்த தொற்று ஏற்படாமல் இருக்க நினைத்தால், இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் குடியுங்கள்.

கல்லீரலில் அழற்சியை தடுக்க இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை தினமும் குடியுங்கள்.இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை ஒருவர் உடற்பயிற்சிக்குப் பின் குடித்தால், அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தசைகளுக்கு ஊட்டமளித்து, தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதயத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

சுரைக்காய் ஜூஸைக் குடித்தால், கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வில் இருந்து விடுபடலாம். இருப்பினும் இந்த பானத்தைக் குடிக்கும் முன் கர்ப்பிணிகள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்.

Share via
Copy link
Powered by Social Snap