விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’… வெளியான ‘அதிரடி’ அறிவிப்பு…!

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருவது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. எனவே அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. மேலும் இதில் நடிகை சமந்தாவும் நடிக்கிறார். மேலும் அனிருத் இசையமைக்கிறார். இப்படி ஸ்டார் பிரபலங்களுடன் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்க இருந்தது.

கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட இருக்கிறதாம். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap