உங்களுக்கு எப்பொழுதும் திடீரென எரிச்சல் கோபம் உண்டாகிறதா?.. இது தான் காரணம்..!

ஒரு மனிதனுக்கு சரசரியாக 7-9 மணி நேரம் தூக்கம் அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்திகிறார்கள். தேவையான அளவு தூக்கம் கிடைக்காதவர்கள் கீழ்கண்ட நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

* ஏதாவது வலி&மூட்டுவலி, முதுகு வலி என தொடர்ந்து இருக்கும்போது சிறு விஷயங்களும் ஒருவரை கோபப்படுத்தும்.

* மன உளைச்சல் உடையவர்கள் எப்போதும் குழப்பத்துடனே இருப்பர்.

* அதிக காபி, டீ, படபடப்பு & எரிச்சலை உண்டாக்கும்.

* மறதி அதிகம் ஏற்படும்பொழுது அதிக எரிச்சல் ஏற்படும்.

* நோய் பாதிப்பு, மாத விலக்கிற்கு ஓரிரு நாள் முன்னர் போன்றவைகள் ஒருவருக்கு எரிச்சலை உண்டாக்கும்.

* மாதவிலக்கு நிற்கும் காலத்தில் பெண்கள் ஒருவித படபடப்பு, எரிச்சல், கோபத்துடன் இருக்கும் வாய்ப்புகள் உண்டு.

* டயட்டிங் என்ற பெயரில் முறையற்ற வகையில் பட்டினி கிடப்பது எரிச்சல், குழப்பத்தை ஏற்படுத்தும்.

* தைராய்டு சுரப்பி குறைபாடு, தைராய்டு ஹார்மோன் அதிகம் சுரந்தாலும் படபடப்பு, வியர்த்தல், எரிச்சல் ஆகியவை இருக்கும்.
குறைபாட்டினை மருத்துவர் மூலம் சரி செய்து கொள்வது அவசியம்.
துளசி, கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், பூண்டு, புதினா இவற்றினை சமையலறை பக்கம் வைத்து தேவைக்கு ஏற்ப சிறிது சிறிதாக பயன்படுத்திக் கொள்வது நலம் பயக்கும்.

Share via
Copy link
Powered by Social Snap