திருமண ஜோடிகளுக்கு தயாரான ஸ்பெஷல் மாஸ்க்… இதன் விலை என்னனு தெரியுமா?

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் மாஸ்க் அணிந்து வரும் நிலையில், வெள்ளியிலான மாஸ்கை கர்நாடகாவில் உள்ள நகைக்கடை உரிமையாளர் வடிவமைத்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகத்தில் உள்ள மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை மூடுவது அவசியமாக்கப்பட்டது. பல நகரங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருக்கும் துணிகளில் மாஸ்க், பன ஓலை, பிளாஸ்டிக் கவர் என்று வித்தியாச வித்தியாசமாக மாஸ்குகள் சமூக வளைதளங்களில் டிரெண்ட் ஆனது.

இந்த நிலையில், கர்நாடகாவின் கொல்லாப்பூர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் வெள்ளியிலான மாஸ்க்-ஐ தயாரித்துள்ளார். திருமண ஜோடிகளுக்காக இந்த மாஸ்க் தயாரிக்கப்பட்டதாகவும், விலை 2500 முதல் 3500 ரூபாய் வரை எடைக்கு ஏற்ப விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap