பச்சை நிற கருவில் முட்டையிடும் கோழி.. ஆச்சர்யத்தில் உறைந்துபோன பொதுமக்கள்.. காரணம் என்ன?

கேரள மாநிலத்தில் ஒருவரின் கோழி பண்ணையில் ஆறு கோழிகள் மட்டும் பச்சை கருவுடன் முட்டையிட்டு வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நபர் ஒருவரின் சிறிய கோழி பண்ணையில் ஆறு கோழிகள் பச்சை மஞ்சள் கருவுடன் கூடிய முட்டைகளிட்டு வருகின்றன.
கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் ஒத்துக்குங்கல் நகரை சேர்ந்த நபரின் வீட்டில், கோழி போட்ட முட்டைகளை குஞ்சு பொறித்த நிலையில், அதில் இருந்து உருவான கோழிகளும் தற்போது பச்சை கரு முட்டைகளை இட ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில், பச்சை முட்டை வைரலானது. இதனையடுத்து நாடு முழுவதிலும் இருந்து பல மக்கள் ஷிஹாபுதீனை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஷிஹாபுதீன் கூறுகையில், ‘பச்சை கரு முட்டை தொடர்பாக சில புகைப்படங்களை நான் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தேன். அதனைத் தொடர்ந்து பலர் பச்சை முட்டைக்காக என்னை அணுகத் தொடங்கினர்.

இப்போது நான் அவற்றை குஞ்சு பொரிப்பதற்காக வைத்திருக்கிறேன். விஞ்ஞானிகள் சில சிறப்பு தீவனங்களை கோழிகள் சாப்பிடும் போது பச்சை மஞ்சள் கருவுடன் முட்டையிடுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என கூறியுள்ளார். இந்த கோழிகளுக்கு நான் எந்த சிறப்பு உணவையும் கொடுக்கவில்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.

பச்சை முட்டைக்கு பின்னணியிலுள்ள காரணத்தை கண்டறிய இன்னும் மூன்று வாரங்கள் தேவைப்படும் என பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், ‘நாங்கள் பல்கலைக்கழகத்தில் வளரும் கோழிகளைக் கவனிப்போம். மூன்று வாரங்களுக்குப் பிறகு, கோழிகள் வெள்ளை முட்டையிட்டால், கோழிகள் பண்ணையில் ஏதாவது சிறப்பு சாப்பிடுகின்றன என்பதை உறுதிப்படுத்த முடியும்.
மூன்று வாரங்களுக்குப் பிறகும் கோழிகள் பச்சை முட்டையிட்டால், எங்களுக்கு கிடைக்கும் இந்த நிகழ்வின் பின்னணியில் சரியான காரணத்தைக் கண்டறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படும்’ என்று அவர் கூறினார்.

Share via
Copy link
Powered by Social Snap