
தல அஜித் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சாதாரணமான நாட்களிலேயே தனிமையை விரும்புவார்கள் என்பதும் பொதுவாக அவர்களை பொது இடத்தில் அதிகம் பார்க்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிகவும் அத்தியாவசியமான இடங்களுக்கு மட்டுமே அஜித் தனது குடும்பத்தினர்களுடன் வெளியே வருவார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் அஜித் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டை விட்டே வெளியே வரவில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் இன்று அஜித்தும் அவருடைய மனைவி ஷாலினியும் மாஸ்க் அணிந்துகொண்டு மருத்துவமனை ஒன்றிற்கு வந்து சென்றுள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.
ஆனால் இவர் யாரை பார்க்க வந்தார் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாவில்லை. அதனால் ரசிகர்கள் அஜித்தின் இந்த திடீர் மருத்துவமனை விசிட்டால் குழப்பத்தில் உள்ளனர்.
ரொம்ப நாள் கழித்து தல தரிசனம்