
பொதுவாக முகம் பொலிவிழந்து அசிங்கமாக காணப்படுவதற்கு காரணம், முகத்தில் அழுக்குகள் அதிகம் தேங்கியிருப்பது தான்.
இத்தகைய அழுக்குகளை அன்றாடம் சுத்தம் செய்து வந்தாலே, முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ளலாம்.
தினமும் முகத்தில் படியும் அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற சில சமையல் அறை பொருட்களை பெரிதும் உதவியாக இருக்கின்றது.
அதிலும் சமையலுக்கு வாசனைக்கு சேர்க்கப்படும் இலவங்கப்பட்டை பெரிதும் உதவியாக இருக்கின்றது.
இதற்காக இனி அழகு நிலையங்களுக்கு செல்லவேண்டிய அவசியமிருக்காது. தற்போது இலவங்கப்பட்டையை வைத்து எப்படி முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றலாம் என இங்கு பார்ப்போம்.
தேவையானவை
இலவங்கபட்டை கரகரப்பாக பொடித்துகொள்ளவும் – 1 டீஸ்பூன்
தயிர் – 2 டீஸ்பூன்
செய்முறை
இரண்டையும் சேர்த்து முகத்தில் வட்டவடிவில் தேய்த்து மசாஜ் செய்யவும். இவை சருமத்தின் மூன்று அடுக்கில் இருக்கும் அழுக்கு முழுவதையும் வெளியேற்றும். முகத்தை பளிச்சென்று வைக்கும்.
வாரம் ஒருமுறை முகத்துக்கு ஸ்க்ரப் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் அழுக்கையும் இறந்த செல்லையும் நீக்கிவிடலாம். அழுக்கை நீக்கி முகத்தை பளிச்சென செய்யும்
குறிப்பு
அதிக வீரியமிக்கதால் சிலருக்கு சருமத்தில் சிவப்பு அல்லது தடிப்பை உண்டாக்கிவிடும்.
நேரடியாக இலவங்கபட்டையை சருமத்துக்கு பயன்படுத்த வேண்டாம். கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை கலந்து பயன்படுத்தவும்.