
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தரும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.
இவர் ஏற்கனவே நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை மீண்டும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு லாலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார்.
இந்நிலையி,ல் தற்போது சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கடவுள் எனக்கு வரம் கொடுத்த நாள்” என கூறி பிறந்த குழந்தையாக லாலாவை முதன்முறையாக கையில் ஏந்திய அழகிய போட்டோவை பதிவிட்டுள்ளார். லாலாவின் பிறந்தநாளுக்கு இணையவாசிகள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.