தனியாக இருந்த பெண்ணிடம் ஏடிஎம் நம்பரைக்கேட்டு திருடன் செய்த அதிர்ச்சி செயல்.. வெளியான பரபரப்பு தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு 80 நாட்களுக்கும் மேலாக அமலில் உள்ளது. இதனால், டெல்லியில் அவ்வப்போது குற்ற சம்பவங்கள் தலைதூக்கி வருகின்றன.

அந்த வகையில் டெல்லி ஜங்க்புரா பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அளித்துள்ள புகார் தற்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகாரில், 23 வயதுடைய அந்த பெண் கடந்த ஞாயிற்றுகிழைமை வீட்டில் மேல்மாடத்தில் நின்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த திருடன் ஒருவன் வந்து கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டிலிருந்த, விலை உயர்ந்த பொருட்களைக் கேட்டுள்ளான்.

அப்போது, தர முடியாது என மறுத்த அந்த பெண், உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் ஏடிஎம் கார்டு மற்றும் ஏடிஎம் ரகசிய எண்ணையும் கேட்டுள்ளான்.

அதையும் தரமுடியாது என அந்த பெண் மறுக்க, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அந்த திருடன், அந்த பெண்ணை அடித்து, துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இறுதியில் ஏடிஎம் கார்டையும் ரகசிய எண்ணையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து திருடன் தப்பிச் சென்றான். திருடன் தாக்கியதில் கடுமையாகக் காயம் அடைந்த அந்த பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

தற்போது விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ள காவல்துறையினர், அந்தப் பெண் அளித்துள்ள புகாரின்படி அந்த திருடனின் பெயர் சோனு என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளார்கள். தலைநகரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் தற்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap