வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த ஷெரின்!

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். இதையடுத்து விசில், உற்சாகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் ஷெரினிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, ”திருமணம் செய்ய, நம் வாழ்வில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அப்படியான ஒருவர் இப்போது என் வாழ்க்கையில் இல்லை. அதுவும் இல்லாம நாம இப்போ ஊரடங்குல இருக்கோம், நான் வீட்டுக்குள்ளே, வர போற என் இளவரசருக்காக காத்துட்டு இருக்கேன்” என்று கூறியுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap