உயிரை பறிக்கும் இதய நோயை தடுக்கணுமா? தினமும் இந்த சக்தி வாய்ந்த உணவு பொருட்களை சாப்பிடுங்க!

நம் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்றாகும். இன்றைய நவீன உலகில், உடல் நலத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறையே இல்லாமல் நாம் ஒரு இயந்திரம் போல பணத்தை மட்டுமே சம்பாதித்து கொண்டிருக்கின்றோம்.

உடல் உறுப்புகளில் முக்கியமானதாக கருதப்படுவது இந்த இதயம் தான்.இதன் துடிப்பு நின்று விட்டால் நாம் எல்லோரும் அவ்வளவுதான்.

எவ்வாறு நாம் இதயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த பருப்பு வகைகள் இதயத்தை நலமாக பார்த்து கொள்ளும் என்பதை பற்றறியும் இந்த பதிவில் அறிவோம்.

வால்நட்ஸ்

ஏராளமான நன்மைகள் இந்த வால்நட்ஸில் உள்ளதாம். தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் இதயத்தில் எந்த வித பாதிப்பும் வராமல் பார்த்து கொள்ளலாம். மேலும், இதில் அதிக ளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. எனவே, இரத்தம் உறைவதை இது தடுக்கும் ஆற்றல் கொண்டது.

பிஸ்தா

சாப்பிடுவதற்கு மிகவும் சுவையான பருப்பு வகைகளில் இந்த பிஸ்தாவும் ஒன்று. தினமும் பிஸ்தா சிறிதளவு சாப்பிட்டு வந்தால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். இதில், குறைந்த அளவே கிளைசெமிக் இன்டெஸ் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம் என ஆராய்ச்சிகள் சொல்கிறது.

பாதாம்

கெட்ட கொலஸ்டரோலை குறைக்கும் தன்மை இந்த பாதாமிற்கு இருக்கிறதாம். அத்துடன் நார்சத்து, மெக்னீசியம், காப்பர், கால்சியம், பொட்டாசியம் போன்ற இதயத்தை பத்திரமாக பார்த்து கொள்ளும் முக்கிய ஊட்டசத்துக்கள் இதில் உள்ளது. அர்ஜினைன் என்ற முக்கிய அமினோ அமிலம் இதில் இருப்பதால், ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்பை தடுத்து, ரத்தம் செல்லும் பாதையை சீராக வைத்து கொள்ளும்.எனவே, ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வரமால் இருக்கும்.

முந்திரி

சமையலுக்கு அதிகம் சேர்க்க்கப்டும் இந்த முந்திரியில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஈ அதிகம் இதில் நிறைந்துள்ளது. இது ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை அடியோடு தடுத்து விடுமாம். மேலும், ஆரோக்கியமான உடல் அமைப்பையும் இது தரும்.

வேர்க்கடலை

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் ஏராளமாக நிறைந்துள்ளது. இதில் சோடியம் அதிக அளவில் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் பார்த்து கொள்ளும். மேலும், இதயத்தின் செயல்பாட்டை சீராக நடத்த இவை வழி செய்யும். வேக வைத்த வேர்க்கடலை, பீனட் பட்டர் போன்றவை நல்ல உணவு பொருட்களாகும்.

ப்ரசிலியன் நட்ஸ்

அதிக சத்துக்கள் இந்த வகை நட்ஸ்களில் உள்ளதாம். இவை உடலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியமான உடல் நலனை பெற இந்த பிரேசிலின் நட்ஸ்கள் பயன்படும். மேலும், இதய கோளாறுகள் ஏற்படாமலும் இவை தடுக்குமாம். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

Share via
Copy link
Powered by Social Snap