ஏழை சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் லாரன்ஸ்… தீயாய் பரவும் பதிவு

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.சில தினங்களுக்கு முன் லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் உணவு பெற்ற சிறுவன், அவரது போஸ்டருக்கு அன்புடன் முத்தம் கொடுக்கும் போட்டோ வைரல் ஆனது.

அதை பார்த்த லாரன்ஸ், ”இந்த போட்டோ, எனக்கு விருது கிடைத்த உணர்வை கொடுக்கிறது” என பதிவிட்டார்.

இதையடுத்து தனது ரசிகர் மன்றம் மூலம் அந்த சிறுவனை கண்டுபிடித்திருக்கிறார்.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ”இந்த சிறுவனை பார்க்கும் போது சிறு வயதில் என்னை பார்த்தது போல இருக்கிறது.
நானும் இதுபோல் தான் கஷ்டமான சூழலில் வளர்ந்தேன். இந்த சிறுவனை காண ஆவலாக உள்ளேன். இவனுக்கு ஏதாவது ஸ்பெஷலாக செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது தீயாய் பரவி வருகின்றது.

Share via
Copy link
Powered by Social Snap