ஒரே வீட்டில் கணவன், மனைவி போன்று வாழ்ந்த காதலர்கள்… இறுதியில் பரிதாபமாக பறிபோன உயிர்

திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த காதலர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் காதலியின் உயிரைப் பறித்துள்ளது.கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர் திப்பேசாமி(26). பெங்களூரில் கார் ஓட்டுநராக வேலை செய்த இவருக்கு, நயனா(24) என்ற பெண் பயணியாக பழக்கமாகியுள்ளார்.

பின்பு இருவரின் நட்பு காதலாக மாற ஒரு கட்டத்தில் ஒரே வீட்டில் கணவன், மனைவி போன்று திருமணமாகாமல் 4 மாதங்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் நயனா இல்லாமல் தனது வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு வந்த, திப்பேசாமி நயனாவிடம் திருமணம் செய்துகொள்வதற்கு பேசியுள்ளார். ஆனால் அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தொடர்ந்து திப்பேசாமி வற்புறுத்தி வந்த நிலையில், குறித்த பெண் தான் வேறொருவரைக் காதலிப்பதாக கூறியுள்ளதையடுத்து, காதலன் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

பின்பு திப்பேசாமி நாம் லிவிங் டு கெதர்ல இருக்கும் போது உனக்கு எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது தற்போது திருமணம் என்றால் வேண்டாமா என்று சண்டையிட்டுள்ளார்.
அப்போது வீட்டிலிருந்த கத்தியை எடுத்து திப்பேசாமியை நயனா குத்தியுள்ளார். இதில், அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நயனாவின் கையிலிருந்த கத்தியை அவர் தட்டி விட்டுள்ளார். உடனே சமையல் அறைக்கு ஓடிய நயனா, அங்கிருந்த தோசைக் கல்லை எடுத்துக் கொண்டு திப்பேசாமியை தாக்க முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தோசைக் கல்லை நயனாவிடமிருந்து பிடுங்கி அவரது தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த நயனா பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

ஆசையாக காதலித்த பெண்ணை தானே கொலை செய்துவிட்டதாக பொலிசிலும் சரணடைந்துள்ளார். பின்பு வழக்கு பதிவு செய்து பொலிசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஒரே வீட்டில் கணவன், மனைவி போன்று வாழ்ந்த காதலர்களின் வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap