ஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை… இந்த ராசிக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது?

ஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார், மிதுனம் ராசியில் ராகு, ஆட்சி பெற்ற புதன், தனுசு ராசியில் கேது மகரம் ராசியில் சனி வக்ரம், குரு வக்ரம், கும்பம் ராசியில் செவ்வாய், கன்னி ராசியில் சந்திரன் என மாதம் ஆரம்பிக்கிறது.
ஜூன் 14ஆம் தேதி சூரியன் மிதுனம் ராசிக்கு மாறி ராகு, புதனோடு இணைகிறார். 18ஆம் தேதி செவ்வாய் மீனம் ராசிக்கு நகர்கிறார். மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ர ஆரம்பமாகிறது.

ஜூன் 25ஆம் தேதி சுக்கிரன் வக்ரம் முடிகிறது. ஜூன் 29ஆம் தேதி தனுசு ராசியில் கேது உடன் இணைகிறார் குரு பகவான்.
இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

துலாம்

உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரனோடு சஞ்சரிக்கிறார். விபத்துகள் ஏற்படலாம் என்பதால் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. அரசு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். துலாம் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் திடீர் செலவுகள், வீண் விரையங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பணம், நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்காதீங்க. பணம் கடன் கொடுக்காதீங்க. எந்த பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கைத்துணைவரின் ஆதரவு கிடைக்கும் உடன் பிறந்தவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. மன உளைச்சலாகவும் இருக்கும். சூரியன் மாத பிற்பகுதியில் மிதுனம் ராசியில் ராகு புதனோடு இணைகிறார். மாணவர்களுக்கு மாத பிற்பகுதியில் படிப்பின் மீதான அக்கறை அதிகரிக்கும்.

சவால்கள் அதிகம் வரும் சங்கடங்கள் அதிகம் வரும் என்றாலும் அதை சமாளித்து சாதனைகளாக மாற்றுவீர்கள். வீண் விரைய செலவுகள் வந்தாலும் அதை சமாளிக்க வருமானமும் வரும். மொத்தத்தில் பொறுமையும் நிதானமாகவும் இருந்தால் இந்த மாதங்களை எளிதில் கடத்திவிடலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு எப்போதும் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவதுதான் வேலை. ஏழரை சனி அடித்து துவைத்து காயப்போட்ட நிலையில் கொரோனா வைரஸ் ஒரு வழி செய்து கொண்டிருக்கிறது. இப்போது வேலையில் ஏதாவது பிரச்சினை வருமா? புதிதாக வருமானத்தை எப்படி பெருக்குவது என்று யோசிப்பீங்க. புது வீடு வாங்கலாமா என்று யோசிப்பீங்க. இந்த மாதம் முயற்சி பண்ணலாம். ஏழாம் வீட்டில் சூரியன் சுக்கிரன் இணைந்திருப்பதால் வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

ராசி நாதன் செவ்வாய் நான்காம் வீட்டில் பலமாக அமர்ந்து உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். திடீர் நிதி நெருக்கடிகள் வரலாம். கடன் விவகாரங்கள் கையை கடிக்கும். பணம் வருவது போல இருந்தாலும் வர மாட்டேங்குதே என்று நினைப்பீர்கள். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும் இந்த மாதம் எச்சரிக்கையாக கடத்த வேண்டும். மாத பிற்பகுதியில் வேலையில் கவனமாக இருங்க. உயரதிகாரிகளிடம் கவனமாக பேசுங்க. உடல் ஆரோக்கியத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

18ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சி ஆகிறார். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்ப வாழ்க்கையில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க ஜூன் மாதத்தில் சிரமமின்றி கடந்து விடலாம்

Share via
Copy link
Powered by Social Snap