மின்சாரம் போன நேரம் ஃப்ரிட்ஜில் வைத்த உணவை சாப்பிடலாமா? இனி ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து விட்டு போங்க? ஏன் தெரியுமா?

பலரும் விடுமுறையில் வெளியே செல்ல திட்டம் போட்டிருப்போம். அப்படி செல்லும் போது, நம் வீட்டில் எத்தனை நாள்/எவ்வளவு நேரம் மின்சாரம் போனது என்று தெரியாது.கண்டிப்பாக நம் வீட்டு ஃப்ரிட்ஜில் ஒருசில சமைத்த உணவுகளை வைத்துவிட்டு செல்வோம். திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உணவு பழுதடைந்து போக வாய்ப்புகள் உண்டு.

இதனால் ஃப்ரிட்ஜில் வைத்து சென்ற உணவுப் பொருள் நன்றாக இருக்குமா இல்லை என்று ஒவ்வொரு முறையும் அதை சூடேற்றி பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.அதற்கு மிக சிறந்த வழி இது தான். முழுமையாக படியுங்கள்.

மின்சாரம் நீண்ட நேரம் இல்லை என்பதை எப்படி அறிவது?

வெளியே சென்ற நேரத்தில் நம் வீட்டில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை ஓர் எளிய வழியின் மூலம் அறியலாம்.

அதுவும் ஒரு நாணயத்தைக் கொண்டு அறிய முடியும்.
மின்சாரம் இல்லாத நேரத்தில், ஃப்ரிட்ஜ் திறக்காமலேயே இருந்தால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவு குறைந்தது 4 மணிநேரம் வரை பாழாகாமல் இருக்கும்.

இதற்கு ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ச்சியான வெப்பநிலை தான் காரணம்.

ஃப்ரீசரில் உணவை வைத்து, ஃப்ரீசர் முழுமையான குளிர்ச்சியில் இருந்தால், 48 மணிநேரம் வரை உணவு பாழாகாமல் இருக்கும். அதுவே ஃப்ரீசர் பாதி குளிர்ச்சியில் இருந்தால், 24 மணிநேரம் வரை ஃப்ரீசரில் வைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.

சோதிக்கும் முறை

ஒரு கண்ணாடி கப்பில் நீரை நிரப்பி, அதை ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க வேண்டும்.

பின் வெளியூர் செல்லும் போது, அந்த கப்பின் மேல் ஒரு நாணயத்தை வைத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வையுங்கள்.
வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது, நாணயம் எங்குள்ளது என்று பாருங்கள்.

நாணயம் அந்த கப்பின் மேற்பகுதியில் அல்லது நடுவில் இருந்தால், சிறிது நேரம் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

ஒருவேளை அந்த நாணயம் கப்பின் அடிப்பகுதியில் இருந்தால், நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்று அர்த்தம்.
இந்நிலையில் ஃப்ரிட்ஜில் உள்ள உணவை சாப்பிடவேக் கூடாது. அப்படி சாப்பிட்டால் மரணம் கூட நிகழ வாய்ப்பு உள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap