‘செம்பருத்தி’ வனஜாவா இது… ஆளே அடையாளம் தெரியல…. இந்த லேட்டஸ்ட் போட்டோவ பாத்திங்களா…?

ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி வரும் சீரியல் ‘செம்பருத்தி’. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். பணக்கார ஹீரோ வீட்டில் பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக போகும் கதையில் கார்த்திக் ராஜ், ஷபானா, சூரியவம்சம் புகழ் பிரியா ராமன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியல் மெகா ஹிட் அடித்ததற்கு இன்னொரு முக்கியமான காரணம் வில்லி கதாபாத்திம் வனஜா. நடிகை லக்ஷ்மியின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் நடிகை லக்ஷ்மி தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்’ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் திகைத்துப் போய்விட்டார்கள். வேற லெவலில் தனது உடலை சிக்’கென்று மாற்றியுள்ளார். இதனைப் பார்த்த பலரும் “தயவுசெய்து உடல் எடையை குறைக்க டிப்ஸ் கொடுங்க மேடம்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்

Share via
Copy link
Powered by Social Snap