ரோஸி, லில்லி, ஜாஸ்மின், கீதா.. பிரபல நடிகைக்கு மாற்று பெயர் வைத்த நெட்டிசன்கள்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் கார்த்தி நடித்துவரும் ’சுல்தான்’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் அவர் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஒரு நகைச்சுவையான கேள்வியை எழுப்பியுள்ளார். ஒருவேளை தனது பெயர் மாற்றப்பட்டால் தனக்கு மாற்று பெயராக ரசிகர்கள் எதனை தேர்வு செய்வார்கள்? என்று ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். ராஷ்மிகா மந்தனாவின் இந்த கேள்விக்கு சுமார் 6,500 பேர் பெயரை தேர்வு செய்து ரிப்ளை செய்துள்ளனர். மேலும் 2,000 பேர் இந்த ட்விட்டை ரீடுவீட் செய்தும் சுமார் 20 ஆயிரம் பேர் லைக் செய்தும் உள்ளனர்.

மேலும் பெரும்பாலான ரசிகர்கள் உங்களுக்கு ராஷ்மிகா மந்தனா என்ற பெயர் பொருத்தமாக இருப்பதாகவும் அந்த பெயரை மாற்ற வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். இருப்பினும் பல நெட்டிசன்கள் அவருக்கு ரோஸி, லில்லி, ஜாஸ்மின், கீதா, பார்வதி, சித்தாரா, சுமா ஆகிய பெயர்களை தேர்வு செய்துள்ளனர்.

ஒருசில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான பெயர்களைத் தேர்வு செய்த ரசிகர்களால் திக்குமுக்காடி போன ராஷ்மிகா, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் தேர்வு செய்த ரோஸி, லில்லி, ஜாஸ்மின் ஆகிய பெயர்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை ராஷ்மிகா மந்தனா தனது பெயரை மாற்றினால் இவற்றில் எந்த பெயரை தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share via
Copy link
Powered by Social Snap