
தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி பல விஷயங்கள் அறிந்திருந்தாலும் அவருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒரு விஷயம்.
அவர் வேறு யாரும் இல்லை, சீரியல் நடிகரான மணிகண்டன் தான்.
இவர் சன் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். வள்ளி, கேளடி கண்மணி, அழகு சீரியல்களில் நடித்துள்ளார். இவரை தவிர ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இரண்டு அண்ணன்கள் இருந்துள்ளனர்.
ஆனால், அவர்கள் இருவருமே இறந்து விட்டார்கள். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், பேட்டி 12 வயது இருக்கும்போது என்னுடைய மூத்த அண்ணன் இறந்துவிட்டார்.
அவர் பெயர் ராகவேந்திரா. அப்போது அவர் ஒரு பெண்ணைகாதலித்தார். இதனால் அவரது இறப்பு, தற்கொலையா கொலையா என்று கூட எங்களுக்கு முழுமையாக தெரியவில்லை.
அதே போல என்னுடைய இரண்டாவது அண்ணன் ஹோட்டல் மேனேஜ்மென்ட்படித்து முடித்துவிட்டு சம்பாதிக்க ஆரம்பித்தார்.
ஆனால், அவரும் ஒரு சாலை விபத்தில இறந்துவிட்டார். அதன் பின்னர் நான் 11வது படிக்கும்போது ஒரு வேலைக்குப் போனேன்.
பெசன்ட் நகரில் இருக்கிற ஒரு சூப்பர் மார்கெட்டில் புதிதாக அறிமுகமான ஒரு சாஸை ரோட்டில் வருபவர்களிடம் ‘மேடம் இந்த சாஸை டேஸ்ட் பண்ணிப் பாருங்க’, ‘ சார் இதைச் சாப்பிட்டிட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க’னு மார்க்கெட்டிங் செய்கிற வேலை செய்துள்ளன்.
அந்த வேலைக்காக எனக்கு ஒருநாளுக்கு 225 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க.அதன்பின்னர் , பர்த்டே பார்ட்டி மாதிரி நிறைய ஈவென்ட்ஸ் ஹோஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன்.
அதன் மூலம் 500, 1,000-னு சம்பளம் வரும். அப்படி மாதம் 5,000 ரூபாய் சம்பாதிச்சேன். அதன் பின்னர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்க போவது யாரு, மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் இந்த நிலைமைக்கு வந்து உள்ளாராம். இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.