இன்னும் ஒரு நாள் தான் என ஆட்டம் போடும் ஆல்யா.. ஏன் தெரியுமா?.. வைரல் வீடியோ!

ராஜா-ராணி சீரியல் மூலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி ஆல்விற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு “ஐலா சையத்” என பெயரிட்டிருக்கும் ஆல்யா அடிக்கடி செல்ல மகளின் அழகிய புகைப்படங்களை முகம் காட்டாமல் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக டான்ஸ் ஆடும் பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு எனது பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. அன்றைய தினத்தில் என் மகள் ஜலாவின் போட்டோவை வெளியிடப்போவதில் உற்சாகமாக இருக்கிறேன்.” என கூறி பதிவிட்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap