இரண்டு முறை கொத்திய பாம்பு… துடிதுடித்த மனைவியை நின்று ரசித்த கணவர்! விடிய விடிய சடலத்துடன் இருந்தது அம்பலம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா. இவரது கணவன் சூரஜ். கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகிய நிலையில் ஒரு வயதில் மகனும் இருக்கின்றார்.
பறக்கோடு பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர். நகைக்காகவும், 2வது கல்யாணம் செய்து கொள்வதற்காகவும் மனைவியை பாம்புகளை ஏவி கொலை செய்துள்ளார்.

மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது. போராடி அவர் உயிரை பெற்றோர் மீட்டு கொண்டு வந்து தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து சென்றனர். அந்த வீட்டுக்குதான் மே 7 ந்தேதி சூரஜ் சென்றிருக்கிறார். திரும்பவும் பாம்பை ஏவிவிட்டு மனைவியை கொன்றிருக்கிறார் சூரஜ்.

தற்போது விசாரணையில், சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார் என தெரியவந்துள்ளது.
உத்ராவை கொலை செய்வதற்காக கூகுளில் பாம்புகளை தேடி உள்ளதோடு, பாம்புகளை பிடிப்பவர்களையும் தேடியுள்ளார்.

இறுதியில் பாம்புகளை லாவகமாக கையாளும் சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவரிடம் ஐடியாக்களை பெற்றுக் கொண்டு, அணலி என்ற ஒரு விஷபாம்பை வாங்கி உத்ரா வீட்டுக்கு முதல் முறை சென்றுள்ளார்.

அந்த முயற்சி தோல்வியடைந்ததும், 2வதுமுறையாக 10 ஆயிரம் கொடுத்து கருமூர்க்கன் என்ற இன்னொரு விஷ பாம்பை வாங்கி கொண்டு உத்ரா வீட்டுக்கு சென்றுள்ளார்.

எலி தொல்லை இருப்பதாக சொல்லியே இந்த 2 பாம்புகளையும் 10 ஆயிரம் ரூபாய் தந்து சுரேஷிடம் இருந்து வாங்கி உள்ளார்.
கடந்த 6ம் தேதி ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு கொண்டுதான் இந்த கருமூர்க்கன் பாம்பை உத்ரா வீட்டுக்கு கொண்டு சென்றதோடு, அவர் தூங்கும்போது, அந்த பாம்பை அவர் மீது தூக்கி வீசியுள்ளார். 2 முறை அந்த பாம்பு உத்ராவை கொத்தி உள்ளது.

வாய் பேச முடியாத உத்ராவால் கத்தி அலறகூட முடியவில்லை.. படுக்கையிலேயே உயிர் பிரிந்துவிட்டது.. பாம்பு கடிப்பதையும், உத்ரா துடிப்பதையும் பார்த்து கொண்டே நின்றிருக்கிறார் சூரஜ்.
துடிதுடித்து உத்ரா இறப்பதையும் பார்த்து கொண்டே நின்ற சூரஜ், அந்த ரூமிலேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்துள்ளார். 8.30 மணிக்கெல்லாம் பாம்பை கடிக்க செய்துள்ளார். ஆனால் விடிய விடிய சடலம் பக்கத்திலேயே கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்.

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் விடிகாலைதான் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.. போகும்போது பாம்பு கொண்டு வந்த பாட்டிலை வெளியே வீசிவிட்டு போயிருக்கிறார். இப்படி ஒரு கொலையை நாடே பார்த்தது இல்லை. உத்ரா கொலையின் அதிர்ச்சி இன்னமும் விலகிவில்லை. தற்போது சூரஜ், மற்றும் பாம்புகளை தந்த சுரேஷை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பாம்பு கொண்டு வந்த பாட்டில் மற்றும் பாம்பு பிடிக்கும் சுரே‌ஷுடன் சூரஜ் செல்போனில் பேசிய விபரங்களும் பெறப்பட்டுள்ளன. உத்ராவை கடித்த பாம்புக்கும் போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது.

உத்ராவின் குடும்பத்தினர் குறித்த பாம்பை அடித்து வீட்டின் பின்புறம் புதைத்ததால் பாம்பின் உடல் அழுகி போயிருந்துள்ளது. எனினும் பாம்பின் பல் இந்த வழக்குக்கு தேவை என்பதால் அதனை எடுத்ததோடு, மற்ற பாகங்களையும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap