இரவு தூங்கும் முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் கட்டாயம் தடவுங்க.. என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?

இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் அப்ளை செய்து கொண்டு படுத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தேங்காய் எண்ணெய்யில் ஃபேட்டி ஆசிட் இருப்பதால் அதை முகத்தில் அப்ளை செய்யும்போது சருமத்திற்கு தேவையான ஈரப்பதமும், வழவழப்புத் தன்மையும் கிடைக்கிறது.
இதனால் மென்மையான சருமத்தைப் பெறலாம். அதுமட்டுமன்றி அதில் உள்ள வைட்டமின் F, லினோலெயிக் ஆசிட் ஆகியவை இருப்பதும் கூடுதல் சிறப்பு.

அதில் இருக்கும் லாரிக் ஆசிட் ஆண்டி ஆக்ஸிடன் கொண்டதால் முகத்தில் பூஞ்சைகள், அழுக்குகள் இருந்தாலும் அழித்துவிடும்.
இரவில் இந்த லாரிக் ஆசிடின் ஆற்றல் அதிகம் என்பதால் தேங்காய் எண்ணெய்யை இரவு அப்ளை செய்வதில் இந்த நன்மையும் இருக்கிறது.

கடினமான, வறண்ட சருமம் என்றால் தொடர்ந்து தேங்காய் எண்ணெய் தடவிப் பாருங்கள். மாய்ஸசரைஸரில் இருக்கும் பலனைக் காட்டிலும் இதில் சிறப்பான பலனை உணர்வீர்கள். இதனால் எரிச்சல், கருந்திட்டுகளின்றி தெளிவான சருமத்தைப் பெறுவீர்கள்.

கொலாஜின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் தேங்காய் எண்ணெய்க்கு உண்டு என்பதால் எப்போதும் இளமையான சரும அழகைக் கொண்டிருப்பீர்கள்.
சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், தோல் சுருக்கம் என எதுவுமே இருக்காது. தழும்புகள், கீரல்கள் இருந்தாலும் தேங்காய் எண்ணெய் தடவி வர மறையும்.

Share via
Copy link
Powered by Social Snap