உரிமையாளர் கொரோனாவால் இறந்தது தெரியாமல்.. மாதக்கணக்கில் காத்திருக்கும் நாய்.. கண்கலங்க வைத்த தகவல்!

உலகத்திலேயே நன்றி உள்ள மிருகம் என்றால் அது நாயை தான் சொல்வார்கள். நாய் தன்னை வளர்ப்பவர்களுக்காக உயிரை கொடுக்கும் அளவிற்கு பாசம் வைத்திருக்கும். அந்த வகையில், சீனாவில் ஒருவர் கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் வளர்த்த நாயும் மருத்துவமனை வாசலில் காத்திருந்தது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட முடியாமல் 5 நாட்களுக்கு பின்னர் பரிதாபமாக பலியானார்.

ஆனால், அவர் வளர்த்த அந்த நாய், தனது உரிமையாளர் திரும்ப வந்து தன்னை அழைத்துச் செல்வார் என அந்த நாய் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் அந்த நாயை துரத்தியும் அந்த நாய் அங்கிருந்து வெளியேற மறுத்து அங்கயே காத்திருந்துள்ளது.
மேலும், கடந்த மூன்று மாதங்களாக நாயின் உரிமையாளர் விட்டுச் சென்ற பகுதியிலேயே அந்த நாய் காத்திருந்துள்ளது. இந்த 3 மாத காலமும் மருத்துவமனை ஊழியர்களே அதற்கு உணவும் அளித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி, மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த நாயை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். இச்சம்பவம் மருத்துவ ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Share via
Copy link
Powered by Social Snap