விபூதியை நெற்றியில் மூன்று பட்டைகள் போடுவதற்கான காரணம் என்ன தெரியுமா?..

கோவில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஒரு அற்புதமான காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும்.

இதில், ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு சாமவேதம், நடுவிரல் யஜீர் வேதம், மோதிரவிரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.
அவை;

1. பிரம்மா, விஷ்ணு, சிவன்.
2. சிவன், சக்தி, ஸ்கந்தர்.
3. அறம், பொருள், இன்பம்.
4. குரு, லிங்கம், சங்கமம்.
5. படைத்தல், காத்தல், அழித்தல்.

Share via
Copy link
Powered by Social Snap