வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை சாப்பிடுங்கள்!… இந்த அதிசயங்கள் நடக்குமாம்

நான்கு மாதங்கள் தொடர்ந்து கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.
பொதுவாக உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்து விடுவோம்.

கறிவேப்பிலையை நன்கு கழுவி தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்னென்னெ நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 2, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வளமாக காணப்படுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரையும்.

நல்ல கொழுப்பை அதிகரித்து, இருதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து கறிவேப்பிலை நல்ல பாதுகாப்பு தரும்.

ரத்தச் சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்தச் சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சினையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சினைகள் நீங்கும்.

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காணலாம். முடி நன்கு கருமையாகவும் இருக்கும்.

சளித்தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் சளி முறிந்துபோகும்.

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகள் வெளியேறும்.மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்பட உதவுகிறது.

Share via
Copy link
Powered by Social Snap