“அனைத்துலக சுகாதார மருத்துவ நிறுவனம்” IMHO நிறைவேற்றி வைத்தது.

கடந்த 11.02.2020 அன்று எமது உயிரிழை அமைப்பின் பயனாளிகளான செல்வி கெங்காதரன் பவதாரணி , செல்வி மதியழகன் விதுர்சிகா ஆகியோரை நாம் நேரில் சென்று சந்தித்து அவர்கள் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற கா.பெ.த. சாதாரண தர பரீட்சையில் சிறப்பான முறையில் சித்தியெய்தியமைக்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியதோடு மட்டுமில்லாமல் அவர்களின் தேவைகளை அறிந்து வந்தோம்.அதன் தொடர்ச்சியாக நாம் இன்று (26.05.2020) அவர்களது வேண்டுகோளை நிறைவேற்றியுள்ளோம்.

ஆம் இன்று செல்வி பவதாரணி மற்றும் செல்வி விதுர்சிகா ஆகியோருக்கு இரண்டு புதிய மடிக்கணினிகளை எமது உயிரிழை அமைப்பு ஊடாக வழங்கி வைத்தோம். மேற்படி இந்த மாணவிகள் இருவரின் வேண்டுகோளையும் “அனைத்துலக சுகாதார மருத்துவ நிறுவனம்” IMHO நிறைவேற்றி வைத்தது. இந்த நேரத்தில் நாம் எமது உயிரிழை அமைப்பு சார்பாக எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். திரு.கிருஷ்ணகுமார் அண்ணா அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு IMHO நிறுவனமானது கடந்த 2010 ஆண்டில் இருந்து இன்றுவரை எமக்கான பல காத்திரமான உதவித்திட்டங்களை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap