சர்ச்சையில் முடிந்த ஆல்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. காரணம் என்ன?

கொரோனா தொற்று காரணமாக பல நாடுகள் லாக்டவுன் போடப்பட்டு, சமூகஇடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறித்து வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவில் சில இடங்களில் லாக்டவுனில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலரது தொழில்கள் இன்னும் பாதிக்கப்பட்டு தான் இருக்கின்றது. இதில் சினிமா பிரபலங்களும் அடங்குவர்.

வீட்டில் இருந்து பொழுதை கழிக்கும் இவர்கள், தங்களது கொண்டாட்டங்களையும் வீட்டில் வைத்து கொண்டாட ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு கொண்டாடிய கொண்டாட்டம் தற்போது சர்ச்சையில் முடிந்துள்ளது.

ஆம் நேற்றைய தினத்தில் ஆல்யா தனது பிறந்தநாளை மொட்டைமாடியில் சிறப்பாக கொண்டாடினார். இதில் சிலர் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் யாரும் மாஸ்க் அணியாமலும், சமூகஇடைவெளியைக் கடைபிடிக்காமல் இறுதியில் ஒன்றாக நின்று புகைப்படம் வேறு எடுத்துள்ளார்கள். ஆதலால் குறித்த கொண்டாட்டம் சர்ச்சையில் முடிந்துள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap