பாட்டியின் கையில் சிக்கிய ராட்சத பாம்பு… மின்னல் வேகத்தில் செய்த காரியத்தைப் பாருங்க!

பாட்டி ஒருவர் பாம்பை வேகமாக இழுத்துக்கொண்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள், பறவைகள், காடுகள் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் அண்மையில் அவர் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ”பாட்டி ஒரு பாம்பை நடத்தும் முறை இதுவல்ல,” என தெரிவித்து அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் பாட்டி ஒருவர் வேகமாக வருகிறார்.

அவரது கையில் மிகப்பெரிய பாம்பு ஒன்று உள்ளது. அதன் வாலைப்பிடித்து அவர் இழுத்து வரும் வேகத்தில் அந்த பாம்பு ஒன்றும் செய்ய முடியாமல் திணறுகிறது. முடிவில் சற்று தூரம் சென்று அந்த பாம்பை சுழற்றி எறிகிறார். இந்த காணொளியை இதுவரை சுமார் 2 லட்சம் பேர் வரை பார்த்து ரசித்துள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap