எமது உயிரிழை அமைப்பின் ஊடாக நாம் முன்னெடுத்து வரும் மனித நேயமிக்க உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வுகள் ஆரம்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன . இந்த காத்திரமான உதவித் திட்டத்தின் ஊடாக ஏற்கனவே 35 குடும்பங்களுக்கு தலா 5000.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது .
அதன் இரண்டாம் கட்டத்திற்கு 50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா 4000.00 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றது. இந்த மனிதாபிமான உதவித் திட்டத்தினை எமது உயிரிழை அமைப்பின் ஊடாக
“பிருத்தானியா வாழ் கைதடி உறவுகள்” யுத்தத்தினால் பாதிப்புற்றிருக்கும் வன்னிமக்களின் பேரிடரிற்காக இந்த உதவித்திட்டத்தினை உயிரிழை நிறுவனமூடாக நடமுறைப்படுத்தி வருகின்றது.