உடனடியாக களத்தில் இறங்கியது உயிரிழை நிர்வாகம்

உயிரிழை அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பயனாளியான பிரதீபன் சிந்துஷா அவர்கள் அழுத்தப்புண் காரணமாகவும் மற்றும் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவும் நேற்று முன்தினம் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டிருந்ததை அறிந்த உயிரிழை நிர்வா உறுப்பினரும் செயலாளருமான திரு இருதயராஜ அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு , அவருக்குத் தேவையான மடிக்ககூடிய சக்கர நாற்காலி ஒன்றினை பெற்று தருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு உடனடியாக ஒரு புதிய சக்கர நாற்காலி வாங்கி கொடுக்கப்பட்டதோடு அவரின் மேலதிக மருத்துவ செலவுக்காக 20000.00 பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த கொரோணா பேரிடர் காலத்தில் உடனடியாக விரைந்து உதவி செய்த உயிரிழை நிர்வாகத்தினருக்கு நன்றி தெரித்தார் பிரதீபன் சிந்துஜா அவர்கள்.

செய்தி வழங்கியவர் 69

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap