வடகிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் ஒன்றிணைத்து உயிரிழை என்ற அமைப்பை நிறுவி இன்று தமக்கான தேவைகளை அதனூடாக பெற் று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு அங்கமாக இன்றும் ஒரு பயனாளிக் உதவி செய்திருக்கிறார்கள் அந்த அமைப்பினர் .
பழுகாமம் 1ச் சேர்ந்த சவுந்தரராசா நிருசன் என்பவருக்கு அவரின் விண்ணப்பத்திற்கு அமைவாக இன்று அவருக்கு கட்டில், மெத்தை, மற்றும் கொமட் கதிரை என்பன வழங்கி வைக்கப்பட்டது. இவர் நீண்ட காலமாக தனது உடைந்த கட்டில் மற்றும் கொமட் கதிரையையே பயன்படுத்தி வந்தார் . இந்த நிலையில் இவரின் விண்ணப்பத்தை உடனடியாக உயிரிழை நிறுவனத்தினர் கவணத்தில் கொண்டு வந்து மேற்படி அத்தியாவசியமான பொருட்கள் வழங்கி வைத்துள்ளார்
முந்தைய நிலை முந்தைய நிலை
செய்தி பதிவு செய்தவர் 69