
கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டரில் சில கருத்துக்களையும் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களையும் பதிவு செய்து வந்தார் என்பது தெரிந்ததே. குறிப்பாக இயக்குனர் சேரன் மீது அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பின்னரும் தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார்.
மேலும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நெட்டிசன்கள் சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டு வந்தனர் என்பதும், இது குறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என மீராமிதுன் தனது கருத்தை ஆவேசமாக தெரிவித்திருந்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது மீராமிதுன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மணக்கோலம் ரியல் என்றும், இதையும் காப்பி செய்ய வேண்டாம் என்றும் அவர் நெட்டிசன்களுக்கு கூறியுள்ளார். மேலும் விரைவில் அவர் திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீராமிதுன் மணமகள் கோலத்தில் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது