விஜய்யுடன் வேலாயுதம்.. ரத்தத்தின் ரத்தமே பாடல் – தெறி நினைவுகள் சொல்லும் சரண்யா மோகன்.

நடிகை சரண்யா மோகன் விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.

நடிகை சரண்யா மோகன் விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.

விஜய் நடிப்பில் 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலாயுதம். மோகன் ராஜா இயக்கிய இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படத்தில் விஜய் மற்றும் சரண்யா மோகன் இடையேயான காட்சிகள் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை சரண்யா மோகன் வீடியோ கால் மூலம் நம்மிடம் பேசினார். அப்போது அவர் விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், ”படத்தின் ஷூட்டிங் தொடங்கிய போது, நான் விஜய் சாரிடம் பேசவே இல்லை.

அவர் எப்போதுமே அமைதியாகவே இருப்பார். ஆனால் படம் முடியும் போது, அது தலைகீழாக மாறிவிட்டது. படத்தில் வேலை செய்த பலரும், எங்களின் அண்ணன் – தங்கை கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது என்று சொன்னார்கள். ரத்தத்தின் ரத்தமே பாடலை, இப்போதும் பலர் எனக்கு ஷேர் செய்து வருகிறார்கள்.

அதே போல விஜய் சார் டான்ஸ் ஷாட்டுக்கு முன் அமைதியாக இருப்பார், ஆனால் டேக்கின் போது எங்கிருந்து அந்த எனர்ஜி வரும் என தெரியாது, அதே போல உடன் இருப்பவர்களையும் அக்கறையாக பார்த்து கொள்வார்” என தெரிவித்தார். மேலும் தனுஷுடன் யாரடி நீ மோகினியில் நடித்தது, தனது திருமண வாழ்க்கை, ரீ என்ட்ரி என பல விஷயங்கள் குறித்து சரண்யா மோகன் மனம் திறந்து பேசினார்.

Share via
Copy link
Powered by Social Snap