உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி சார்ஜ்குறையுதா?.. இந்த 5 டிப்ஸ்களை உடனே பின்பற்றுங்கள்..!

நமது ஸ்மார்போன்கள் நமது வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது, இதன் காரணமாக நாம் அதை அதிகப்படியாக சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.

=ஸ்மார்போன்களை சார்ஜ் செய்ய முடியாத சூழலில் நாம் வெளியே இருக்கும் போது அதன் பேட்டரி ஆயுளை சேமிக்க வேண்டியது மிக முக்கியமானது. உங்களுடைய ஆண்ட்ராய்ட் கைபேசியின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க சில குறிப்புகள் இங்கே பகிரப்பட்டுள்ளது.

GPS location’ஐ ஆப் (off)

GPS அதிகப்படியான சக்தியை (power) எடுக்கும். சிறப்பான சேவையை நமக்கு அளிக்க சில ஆப்களுக்கு location access தேவைப்படும். ஆனால் அதற்காக எல்லா நேரமும் GPS ஐ ஆன் செய்து வைத்தால் பேட்டரி சீக்கிரமாக தீர்ந்துவிடும்.

எப்போது தேவைப்படுகிறதோ அப்போது ஆன் செய்து விட்டு மற்ற நேரங்களில் அதை ஆப் செய்து வைப்பது சிறந்தது. சில ஆண்ட்ராய்ட் கைபேசிகளில் GPS ஐ ஆப் செய்துவிட்டு, கைபேசி நெட்வொர்க் அல்லது Wi-Fi அல்லது Bluetooth மூலமாக இருப்பிடத்தை தீர்மானிக்க கூடிய வசதி உள்ளது. இது பேட்டரி ஆயுளை அதிகரிக்கும்.

Dark Mode ஐ ஆன்

இப்போதெல்லாம் பெரும்பாலான ஆண்ட்ராய்ட் கருவிகள் Dark Mode அம்சத்துடனேயே வருகிறது. இது dark theme ஐ அனைத்து user interface லும் பொருத்தும். உங்கள் கைபேசியில் OLED திரை இருந்தால் இது பேட்டரியை பாதுகாக்க உதவும்.

எனவே dark theme ஐ பயன்படுத்துவதால் உங்கள் கைபேசியின் திரையை ஒளிரச் செய்ய பயன்படுத்தப்படும் சக்தியைக் குறைக்கும். இதன் மூலம் பேட்டரி சக்தி சேமிக்கப்படும்.
பின்னனியில் இயங்கும் ஆப்களை குறைத்துக் கொள்ளவும்
Home பொத்தானை அழுத்தியோ அல்லது கீழிருந்து மேலாக ஸ்வைப் செய்தோ (swiping up from the bottom) ஆப்களை விட்டு வெளியேறுவதை நாம் வாடிக்கையாக கொண்டுள்ளோம்.

இப்படி செய்வதால் அந்த ஆப் முழுவதுமாக இயக்கத்தை நிறுத்திக் கொள்ளாமல் பின்னனியில் தொடர்ந்து இயங்கி வரும்.
எனவே ஒரு ஆப்பிலிருந்து சரியாக வெளியேர வேண்டும். அல்லது recent items லிருந்து கிளியர் செய்ய வேண்டும். இரண்டாவதாக பின்னனியில் இயங்கும் ஆப்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டும்.

பேட்டரியை சீக்கிரமாக தீர்க்கும் (battery killers)

சில நேரங்களில் சில ஆப்கள் bugs காரணமாக அல்லது வேறு காரணங்களால் சரியாக வேலை செய்யாமல் உங்கள் கைபேசியின் பேட்டரி ஆயுளை சீக்கிரமாக தீர்த்து விடும். உங்கள் கைபேசியின் பேட்டரி பயன்பாட்டை ஆய்வு செய்து இது போன்ற ஆப்களை தவிர்க்க வேண்டும்.

Lite apps அல்லது web-based interface க்கு மாறுங்கள்

Play Store-ல் பல ஆப்களின் slimmed-down பதிப்பு கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக Facebook Lite, Messenger Lite போன்றவை. பிற ஆப்கள் லேசான அனுபவத்தை web-browser வழியாக Ola Cabs போன்றவை வழங்குகின்றன.

எனவே உங்கள் பேட்டரி ஆயுளை சேமிக்க இந்த வகை web-based interfaces அல்லது lite பதிப்புகளை பயன்படுத்தலாம்.

Share via
Copy link
Powered by Social Snap