கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்த குரங்கு! கடும் பதற்றத்தில் மக்கள்!

கொரோனா நோயாளிகளின் ரத்த பரிசோதனை மாதிரிகள், ஆபரேஷன் கிளவுஸ்கள் ஆகியவற்றை மருத்துவமனை ஊழியர்களை தாக்கி, குரங்கு தூக்கிக்கொண்டு ஓடும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்து குரங்கு ஒன்று கொரோனா நோயாளிகளின் ரத்த மாதிரிகள், ஆப்ரேஷன் கிளவுஸ்கள் ஆகியவற்றை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் ஓடியிருக்கிறது.

எனினும், இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் எஸ்.கே.கார்க் கூறுகையில், ”குரங்கு திருடிச் சென்றது கொரோனா டெஸ்ட் மாதிரிகள் அல்ல. ஆனால், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரிசோதனைக்காக ரத்தம் சேகரிப்பது வழக்கமான நடைமுறைதான்.

குரங்கு திருடிச்சென்றது புதிதாக எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள். இந்த சம்பவத்தால் கொரோனா வைரைஸ் பரவ வாய்ப்பு இருக்குமோ என அருகில் உள்ளவர்கள் அச்சப்படத்தேவையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap