தெருதெருவாக வடை விற்று குடும்பத்தை காப்பாற்றும் 12 வயது தமிழ் சிறுவன்

தஞ்சாவூரில் தன் குடும்பத்தை காப்பதற்காக 12 வயது சிறுவன் தினமும் 10 கிலோ மீட்டர் வரை சைக்கிளிலேயே சென்று வடை, சமோசா உள்ளிட்ட பலகாரங்களை வியாபாரம் செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி கிராமம் உப்பரிகை என்ற பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்.
இவருக்கு 15 வயதில் ஒரு மகள், 12 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

கொத்தனாராக வேலை செய்து வந்த வரதராஜன் திடீரென நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டார்.
இதனால் குடும்பம் வறுமையில் தவிக்கவே அவரது மனைவி சுமதி வீட்டிலிருந்தபடியே நூல் கண்டு தயாரிக்கும் கூலி வேலை செய்து வந்தார்.

அதில் கிடைத்த சொற்ப வருமானத்தை கொண்டு தன் பிள்ளைகள் மற்றும் கணவரையும் கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு சுமதியை கடுமையாக பாதித்தது. ஒரு பக்கம் முடங்கி கிடக்கும் கணவன் மறும் பக்கம் 3 பிள்ளைகள் என பரிதவித்தபடி இருந்துள்ளார்.
தங்களது நிலையை கண்டு கலங்கிய சுமதியிடம், நான் வேலைக்கு போய் உங்களை காப்பாற்றுகிறேன் என விஷ்ணு கூற மேலும் கண்ணீர் வடித்துள்ளார்.

சுமதியோ தன் மகனிடம் ” நீ வேலைக்கெல்லாம் போக வேண்டாம், போண்டா, வடை எல்லாம் செய்து தருகிறேன். அதை விற்பனை செய்துவிட்டு வா என கூறியுள்ளார்.

பின்னர் அவர் தினமும் வடை, போண்டா சுட்டு கொடுக்க அதனுடன் கடைக்கு சென்று மொத்தமாக சமோசா வாங்கி கொண்டு வியாபாரத்திற்கு சென்று அவற்றை விற்று வருகிறார் விஷ்ணு.
இதில் தினமும் 100 ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும், அதைக் கொண்டு தன் குடும்பத்தை பசியாறுவதாகவும் தெரிவிக்கிறார் விஷ்ணு.

Share via
Copy link
Powered by Social Snap