மண்ணுக்குள் இருந்து வந்த குழந்தையின் அழுகை சத்தம்..! தோண்டியவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் சனவுரா கிராமத்தில் சித்தார்த்நகர் பகுதியில் கடந்த 25-ஆம் தேதி, வீடு கட்டுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தது.

அப்போது அங்கிருந்த மண்ணின் உள்ளே பிஞ்சு குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டு வேலையாட்கள் திடுக்கிட்டனர்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதியை தோண்டி பார்த்த போது, குழந்தை ஒன்று அங்கு உயிருடன் இருந்ததால், உடனடியாக அதனை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது குழந்தையை சோதித்த பார்த்த மருத்துவர்கள், வாயில் மட்டும் மண் போய் உள்ளது. மற்ற படி குழந்தையின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனையில் தொடர்ந்தும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை புதைக்கப்பட்ட சில நிமிடங்களிலையே குழந்தை அழு தொடங்கியதால் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார் குழந்தை மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap