
இந்திய கிரிக்கெட் உலகின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள். மூத்தவர் சாரா அடுத்து மகன் அர்ஜூன்.
இவர்களில் அர்ஜூன் தனது தந்தை வழியில் கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகிறார். மீடியாவின் வெளிச்சம் தன் மகன் மீது படாமல் பார்த்துக்கொள்கிறார் சச்சின்.
மூத்த பெண்ணான சாரா குறித்து சமீபகாலமாக செய்திகள் வேகம் பிடித்துள்ளன. ஏற்கனவே சாரா மீது பாலிவுட் இயக்குனர்களின் கண்கள் பாய்ந்தபடியே இருந்தன. மிகவும் அழகாக மட்டுமல்ல, புத்திசாலியாகவும் இருப்பவர் சாரா என்று புகழ் வட்டத்தில் இருந்து வந்தார்.
தற்போது, அவரை நடிகையாக்க முயற்சிகள் நடந்து வருகின்றனவாம். ஆனால் கடந்த சில நாட்களாக சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
இவரை இன்ஸ்டாகிராம் பின் தொடர்வோரின் எண்ணிகையும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.