சந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்?

சந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம நாளில் வீண் வம்பு வேண்டாம் என்று ஜோதிடர்கள் எச்சரிப்பதால்தான். சந்திராஷ்டம நாளில் வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாக போகவேண்டும் என்றும் எச்சரிப்பதால் காலண்டரை கிழிக்கும் போதும், ராசி பலன் பார்க்கும் போதும் நமக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதா என்று பார்த்து விட்டுதான் வேலையை பார்க்கின்றனர். ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நாளில் சந்திராஷ்டமம் வருகிறது என்று பார்க்கலாம்.

சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. நம்முடைய ராசிக்கு சந்திரன் எட்டாவது வீட்டில் இருந்தால் அன்றைய தினம் நமக்கு சந்திராஷ்டமம் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த ஜூன் மாதத்தில் சந்திராஷ்டமம் வரும் நாட்களை டைரியில் குறித்து வைத்து வைத்துக்கொள்ளுங்கள் அன்றைய தினம் எச்சரிக்கையாக இருங்கள்.

மேஷம் – மேஷம் ராசிக்கு இந்த மாதம் 04-06-2020 அன்று பிற்பகல் 01.07 மணி முதல் 06.06.2020 பிற்பகல் 3.12 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வெல்லம் சாப்பிட்டு விட்டு வேலைகளை தொடரலாம் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருக்கவும். ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். முருகப்பெருமானை வழிபடுங்க.

ரிஷபம் – ரிஷபம் ராசிக்கு இந்த மாதம் 06.06.2020 பிற்பகல் 3.12 மணி முதல் 08.06.2020 இரவு 7.45 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. பணம் விவகாரங்களில் கவனமாக இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கை தேவை. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். பயப்பட வேண்டாம் பயம் அகல ஆஞ்சநேயர் வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம் – மிதுனம் ராசிக்கு 08.06.2020 இரவு 7.45 மணி முதல் 11.06.2020 அதிகாலை 3.41மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. வீட்டை விட்டு வெளியே எதற்காகவும் போகாதீங்க. வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

கடகம் – கடகம் ராசிக்கு 11.06.2020 அதிகாலை 3.41மணி முதல் 13.06.2020 பிற்பகல் 2.46 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருங்க வீண் வம்பு வழக்குகளில் தலையிட வேண்டாம். வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

சிம்மம் – சிம்மம் ராசிக்கு 13.06.2020 பிற்பகல் 2.46 மணி முதல் 16.06.2020 அதிகாலை 3.17 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாகவும் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த நாட்களில் மவுன விரதம் இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

கன்னி – கன்னி ராசிக்கு 16.06.2020 அதிகாலை 3.17 மணி முதல் 18.06.2020 அன்று பிற்பகல் 03.03 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க. வீட்டில் யார் கூடவும் கோபமாக பேசவேண்டாம். நிதானமாக இருங்க. வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

துலாம் – துலாம் ராசிக்கு 18.06.2020 அன்று பிற்பகல் 03.03 மணி முதல் 21.06.2020 அன்று நள்ளிரவு 12.35 வரைக்கும் வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வீண் பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள். வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

விருச்சிகம் – விருச்சிகம் ராசிக்கு 21.06.2020 அன்று நள்ளிரவு 12.35 மணி முதல் 23.06.2020 காலை 7.34 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க சின்ன பிரச்சினைகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது கவனமாகவும் நிதானமாகவும் இருங்க. வீண் பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள். வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

தனுசு – தனுசு ராசிக்கு 23.06.2020 காலை 7.34 மணி முதல் 25.06.2020 அன்று பிற்பகல் 12.26 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் பேச்சில் கவனமாக இருங்க. வீட்டை விட்டு வெளியே போகும் போதும் வண்டி வாகனத்தில் வெளியே போகும் போது எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

மகரம் – மகரம் ராசிக்கு 25.06.2020 அன்று பிற்பகல் 12.26 மணி முதல் 27.06.2020 மாலை 3.50 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. கவனமாக இருக்கவும் வாயை கொடுத்து வீண் வம்பில் மாட்டிக்காதீங்க. மவுன விரதம் இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

கும்பம் – கும்பம் ராசிக்கு 01.06.2020, 02.6.2020 காலை 11.59 மணி வரைக்கும், 27.06.2020 மாலை 3.50 முதல் 29.06.2020 மாலை 6.26 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. நான்கு நாட்கள் கவனமாக இருங்க. வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

மீனம் – மீனம் ராசிக்கு 02.06.2020 காலை 11.59 மணி முதல் 04.06.2020 மாலை 1.07 மணிவரைக்கும் 29.06.2020 மாலை 6.26 மணி முதல் 01.07.2020 வரை சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் கவனமாக இருங்க. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்காதீங்க. மவுன விரதம் இருங்க. வீட்டை விட்டு வண்டி வாகனங்களில் போகும் போது எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

Share via
Copy link
Powered by Social Snap