
முன்னணி நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் கலக்கி வருவபவர். தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து படங்களில் துணிச்சலான வேடங்களில் துணிந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது நடிகை சமந்தாவின் பள்ளிப்பருவ ரேங்க் சீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை போலவே சமந்தா படிப்பிலும் டாப்பாக இருந்துள்ளார். பள்ளி பருவ ரேங்க் ஷீட்டை ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஷேர் செய்ய அதனைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டு உள்ளார் சமந்தா.