பிரபல நடிகை மியா ஜார்ஜுக்கு திருமணம், சத்தமில்லாமல் நடந்து முடித்த நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..

தமிழில் அமர காவியம் எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இவர் இதற்கு முன் பல மலையாள படங்களில் நடித்து வந்துள்ளார்.

இதன்பின் தமிழில் இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். ஆனால் எமன் படத்திற்கு பிறகு இவருக்கு, பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

ஆனால் தற்போது மலையாள திரையுலகில் சிறந்த நடிகையாக விளங்கி வருகிறார் மியா. இந்நிலையில் மியாவிற்கு அஷ்வின் பிலிப் என்பவருடன் கூடிய விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

ஆம் சமீபத்தில் கூட கொரோனா காரணமாக இவரின் நிச்சயதார்த்தம் சத்தமில்லாமல் மணமகன் அஷ்வின் பிலிப் வீட்டில் சிறப்பாக நடந்துள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதம் திருமணம் நடக்கப்போவதாக தெரிவிக்கின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap