பெண் போலீசை திருமணம் செய்துவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான கணவன்!!

தமிழகத்தில் பெண் பொலிசை ஏமாற்றி திருமணம் செய்து 7 லட்சம் ரூபாய் மற்றும் 10 பவுன் நகையுடன் தலைமறைவான நபரை பொலிசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் களக்காட்டில் பெண் பொலிசாராக பணியாற்றி வருபவர் தங்கராணி. இவருக்கும் அங்கிருக்கும் ராதாபுரத்தில் மளிகை கடை நடத்தி வரும், சிவ பிரேம்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், சிவ பிரேம்குமார் தங்கராணியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மற்றும் 10 பவுன் நகைகளை பெற்றுள்ளார்.

அதன் பின், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதனால், தங்கராணி, சிவபிரேம்குமாரிடம் கொடுத்ததாக கூறப்படும் 7 லட்ச ரூபாய் மற்றும் நகைகளை திருப்பி கேட்டுள்ளார்.

பணத்தையும் நகைகளையும் திருப்பிக் கொடுக்க மறுத்துவந்த சிவபிரேம்குமார் பெண் பொலிஸ் தங்க ராணியை தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளார்.இதையடுத்து தங்கராணி ராதாபுரம் பொலிசில் புகார் கொடுக்க, புகாரின்பேரில் ராதாபுரம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெகதா, பெண்கள் வன்கொடுமை ,மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிவ பிரேம்குமாரை தேடி வருகிறார்.

Share via
Copy link
Powered by Social Snap