தாய் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…

திருவள்ளூர் அருகே செல்போனில் நீண்ட நேரம் பேசியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மகள் ரோகிதா (20). ரோகிதா காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரோகிதா செல்போனில் யாரிடமோ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இதை அவரது தாயார் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மன வேதனை அடைந்த அவர், தனது அறைக்குச் சென்று மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கடம்பத்தூர் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap