இளையராஜாவின் மகனை முஸ்லிமாக மாற்றிவிட்டீர்களே: ரசிகருக்கு அதிரடியாக பதிலளித்த யுவனின் மனைவி!!

பிரபல இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவின் மகனுமான யுவன் சங்கர் ராஜா, 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்துக்கு மாறியதுடன் அவருடைய பெயரை அப்துல் காலிக் என மாற்றிக் கொண்டார்.

பின்னர் 2015ம் ஆண்டு ஷாப்ரூன் நிஷாவை திருமணம் செய்தவருக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் ரசிகர் ஒருவர், நன்றாக இருந்த யுவனை இப்படி மாற்றிவிட்டீர்களே என கேட்க, எந்தளவுக்கு மேலோட்டமாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்றார்.

அவரும் விடாமல், இளையராஜா சாருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், அவர் மகனை இப்படி மாற்றிவிட்டீர்களே என்றார். அதற்கு, இது உங்கள் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது.

நான் உங்களுக்குப் பதில் அளிக்கத் தேவையில்லை. ஆனால் மக்கள் எந்தளவுக்கு முட்டாளாக உள்ளார்கள் என எண்ணி அதிர்ச்சியடைகிறேன். யுவனின் மனத்தில் நான் விஷத்தைக் கலக்கவில்லை.

என்னைத் திருமணம் செய்யும் முன்பே அவர் இஸ்லாமியராக மாறிவிட்டார். நான் அவரைச் சந்திக்கும் முன்பே நான்கு வருடங்களாக இஸ்லாத்தைப் பின்பற்றி வந்தார் என பதிலளித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap