திருமணமான 7 நாளில் புதுப்பெண் செய்த செயல்… குழப்பத்தில் பொலிசார்

திருமணமாகி 7 நாளில் புது மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை மலுமிச்சம்பட்டி செட்டிபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் (31) என்பவருக்கும், வெள்ளலூர் பட்டணம் ரோடு பகுதியை சேர்ந்த கிறிஸ்டினா(27) என்பவருக்கும் கடந்த 27-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று கிறிஸ்டினா வீட்டில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ந்து போன அக்கம், பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் அளிக்க அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி ஒரே வாரத்தில் இறந்ததால் இது தற்கொலையா? இல்லை கொலையா?என்னும் ரீதியில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Share via
Copy link
Powered by Social Snap