நடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா?.. உறுதி செய்த விடிவி கணேஷ்..!

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை வெங்கட் பிரபு இயக்க, அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்று சிறப்பு சிகிச்சைகள் எடுத்து உடல் எடையைக் குறைத்தார் சிம்பு. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெளியே கசிந்த தகவலின்படி நெருங்கிய சொந்தக்காரப் பெண்ணை சிம்புவுக்கு துணையாக தேர்ந்தெடுத்திருக்கிறாராம் அவரது தாய் உஷா. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நடிகர் VTV கணேஷ் சமீபத்தில் பிரபல வலைத்தளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் சிம்புவுக்கு விரைவில் திருமணம். சீக்கிரமே அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார். இதனால் சிம்புவிடம் இருந்து ஒரு பதில் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share via
Copy link
Powered by Social Snap