லண்டனில் மாணவிக்கு நேர்ந்த நிலை : மகளை நினைத்து உருகும் பெற்றோர்!!

லண்டனில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகள் பெற்றோரிடம் செல்ல முடியாமல் தவித்த நிலையில் ஒருவழியாக அவர்கள் செல்வதற்கு வழி பிறந்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பால் பல நாடுகள் முடங்கியதால் விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்த சூழலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட முகமது அசாத் என்பவரின் மகள் அல்பிரா கான் லண்டனில் தங்கி படித்து வருகிறார்.

அல்பிராவின் பெற்றோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் நிலையில் மகளை காணாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று லண்டனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் விமானத்தில் அல்பிரா பயணிக்கவுள்ளார்.

இது குறித்து அசாத் கூறுகையில், கடந்த மார்ச் 19ஆம் திகதியே லண்டனில் இருந்து இங்கு வர என் மகள் திட்டமிட்டாள். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த இரண்டரை மாதங்களாக என் மகள் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார், ஏனெனில் அவளுடைய பெரும்பாலான நண்பர்கள் மற்றும் கல்லூரி தோழர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியதால் அவள் தனியாக இருந்தாள்.

ஆனால் எப்படியோ அவள் ஊருக்கு திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார். அதே போல பாகிஸ்தானை சேர்ந்த ஸ்னோபர் சலிம் என்ற பெண்ணின் மகள் ஆயிஷா லண்டனில் தங்கி படித்து வருகிறார்.

ஸ்னோபரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த சூழலில் ஆயிஷாவும் தனது தாயை காண விரைவில் லண்டனில் இருந்து கிளம்பவுள்ளார்.

இது குறித்து ஸ்னோபர் கூறுகையில், நான் தனியாக தான் வசிக்கிறேன், எனக்கு ஆயிஷா ஒரே மகள். ஆயிஷாவால் என்னை பார்க்க வர முடியாததால் மிகவும் வருத்தமடைந்ததோடு, தனிமையில் வாடினாள்.

இது குறித்து ஸ்னோபர் கூறுகையில், நான் தனியாக தான் வசிக்கிறேன், எனக்கு ஆயிஷா ஒரே மகள். ஆயிஷாவால் என்னை பார்க்க வர முடியாததால் மிகவும் வருத்தமடைந்ததோடு, தனிமையில் வாடினாள்.

Share via
Copy link
Powered by Social Snap