இணையத்தில் வைரலாகும் ஹர்பஜன் சிங்-லாஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’ ஃபர்ஸ்ட் லுக்!போஸ்டர் உள்ளே..

தமிழ்ப் பற்றாளரும், இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர் இந்த படத்தில் ஹர்பஜன் சிங்க்கிற்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் இணைந்துள்ளார். படத்தின் கூடுதல் பலமாகப் பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

கொரோனா காரணமாக தடைபட்ட பல படங்களில் இதுவும் ஒன்று என்ற நிலையில், இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், தற்போது ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் கலக்கலாக ஃபர்ஸ் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி, இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஹர்பஜன் “இடியும், மின்னலும் ஆர்பரிக்க இதோ சூப்பர்ஸ்டார், தல, தளபதி, உலக நாயகன் கோட்டையில் நம்ம Friendship First look” என பதிவிட்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap