விஜய் சேதுபதி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் ரோஜா?முழு விவரம் உள்ளே

தெலுங்கில் ரங்கஸ்தலம் என்ற வெற்றிப் படத்துக்குப் பின்னர் சுகுமார் இயக்கும் படம் புஷ்பா. அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் திரைத்துறைக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதும் கூடுதல் தகவல்.

2015-ம் ஆண்டு ‘கில்லாடி’, ‘புலன் விசாரணை 2’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த நடிகை ரோஜா, பின்னர் அரசியலில் கவனம் செலுத்தியதால் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது அவர் புஷ்பா திரைப்படம் மூலம் 5 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ரீஎன்ட்ரி ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap